Tuesday, 19 May 2020

சிறகைத் தொலைத்த பட்டாம்பூச்சிகள்

சிறகைத் தொலைத்த பட்டாம்பூச்சிகள்




எங்கள்
சுயத்தை
சுவீகரித்த
சூத்திரதாரி யார்?

வெள்ளைக்
கட்டிடச் சிறைக்குள்
செவிமூடிய சிலைகளாய்
நாங்கள்...

' கையைக் கட்டு'
' வாயை மூடு'
' பேசாதே!'
இவைகளே நாங்கள்
அதிகமறிந்த
' அரிச்சுவடி'
பாடங்கள்...

நாங்கள் அறியாத
வினாக்களைத்
தெடுக்கும்போதெல்லாம்
' அதிகப்பிரசங்கி'
எனும்
அவசரப் பட்டத்தால்
அர்சிக்கப்படுவோம்!

அதோ!
ஐன்னலுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி!
எங்கள்
கரங்களைக்
கட்டிப்போட்டது யார்?

'வீட்டுப்பாடம்'
'தேர்வு'
'மதிப்பெண்களின்'
துரத்தல்கள் நீளுகின்றன...
எங்கள் கனவின்
எல்லை வரை...

புத்தகப் பொதியைத்
சுமக்கும் நாங்களே
ஒரு 'திறந்தப் புத்தகம்'
உங்களில்
படிக்கப் போவது
யார்?

' மக்கு'
' பன்னாடை'
' உதவாக்கரை'
என்றெல்லாம்,
ஓரமாய் ஒதுக்கப்பட்ட
சிலரின் கனவுகள்
கடைசி
வரிசையிலேயே
கரைந்து
போய்விடுகிறது...

சற்று...
கூர்ந்து கவனியுங்கள்.
எங்களின் சில
'மௌன விசும்பல்கள்'
உங்கள் செவிகளில்
பலநூறு கதைகளைச்
சொல்லலாம்.....
 
     - கவிஞர்.பாரதிகிருஷ்ணன்.